பலம் வாய்ந்த தலைவராக - மீண்டும் எர்டோகன்!

துருக்கிய தலைவராக மீண்டும் ரெசெப் தயீப் எர்டோகன்

by Staff Writer 25-06-2018 | 7:22 PM

53 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று ரெசெப் தயீப் எர்டோகன்  மீண்டும் வெற்றி பெற்றதனையடுத்து உலகலாவிய ரீதியில் அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணமுள்ளன.

இவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு மக்கள் கட்சி வேட்பாளர் முஹர்ரமினால் 31 சதவீத வாக்குகளையே பெற முடிந்தது. ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் வெற்றி பெற்ற தயீப் எர்டோகன் மீண்டும் துருக்கியின் ஜனாதிபதி ஆகின்றார். தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து மக்கள் தொடர் ஆரவாரங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையால் துருக்கியின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உலகலாவிய முஸ்லிம்களின் அன்பைப் பெற்ற தலைவராக சமகாலத்தில் தயீப் எர்டோகன் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.