கணக்காய்வு விவாதம் 05ம் திகதி பாராளுமன்றத்தில்!

சர்ச்சைக்குரிய கணக்காய்வு சட்டமூலம் எதிர்வரும் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில்

by Staff Writer 25-06-2018 | 6:25 PM

சர்ச்சைக்குரிய கணக்காய்வு சட்டமூலம் எதிர்வரும் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த விவாதம் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இந்தவெல தெரிவித்தார். அன்றைய தினத்தில் முற்பகல் 11 மணி முதல் மாலை 6.30 வரை விவாதம் இடம்பெறவுள்ளது. தேசிய கணக்காய்வு சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தேசிய கணக்காய்வாளர் ஆணைக்குழுவை பலப்படுத்துவதுடன் தேசிய கணக்காய்வு அலுவலகத்தை நிறுவுவது தேசிய கணக்காய்வு சட்டமூலத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.