மஹிந்த சம்மதிப்பின் தயார் - கோட்டாபய !

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்தால், பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்ளமுடியும் - கோட்டாபய ராஜபக்ஸ

by Staff Writer 25-06-2018 | 6:52 PM

டி ஏ ராஜபக்ஸ அருங்காட்சியகத்தை அமைப்பதற்கு அரசாங்கத்தின் நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பாதுகாப்பு கோட்டாபய ராஜபக்ச இன்று பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இன்று காலை 9 மணிக்கு பொலிஸ் நிதி குற்ற விசாரணைப்பிரிவில் ஆஜராகியிருந்தார். சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் மதியம் 12 மணியளவில் அவர் அங்கிருந்து வௌியேறினார். இதன்போது கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்வீர்களா என இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமக்கு இதுவரை அறிவிக்கவில்லையெனவும் அவ்வாறு அறிவித்தால் பிராஜாவுரிமையை நீக்கிக்கொள்ளமுடியும் எனவும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களில் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்ளமுடியும் என தாம் நம்புவதாக முன்னாள் பாதுகாப்ப செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.