துருக்கிய ஜனாதிபதி, பொதுத் தேர்தல்கள் இன்று

துருக்கிய ஜனாதிபதி, பொதுத் தேர்தல்கள் இன்று

by Staff Writer 24-06-2018 | 2:30 PM
துருக்கியில் இன்று ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியது. உள்நாட்டு நேரப்படி இன்று காலை 8 மணிக்கு வாக்கெடுப்பு ஆரம்பித்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. தேர்தலில் துருக்கியின் பொருளாதார நிலையே முக்கிய தாக்கம் செலுத்தும் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தற்போதைய ஜனாதிபதி ரிசெப் தயீப் எர்டோகன் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜனாதிபதிக்கு சவாலாக உள்ளதாகவும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 2019 ஆம் ஆண்டிலேயே தேர்தலை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் எர்டோகனின் தீர்மானத்திற்கமைய தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுகின்றது. துருக்கியில் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை தற்போது வரை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.