பொசொனை முன்னிட்டு அநுராதபுரத்தில் 7 பாடசாலைகள் நாளை முதல் மூடப்படவுள்ளன

பொசொனை முன்னிட்டு அநுராதபுரத்தில் 7 பாடசாலைகள் நாளை முதல் மூடப்படவுள்ளன

பொசொனை முன்னிட்டு அநுராதபுரத்தில் 7 பாடசாலைகள் நாளை முதல் மூடப்படவுள்ளன

எழுத்தாளர் Staff Writer

24 Jun, 2018 | 9:49 am

Colombo (News 1st) பொசொன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரத்திலுள்ள 7 பாடசாலைகள் நாளை முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளன.

அநுராதபுரம் மத்திய கல்லூரி, அநுராதபுரம் வலசிங்க ஹரிஸ்சந்திர மகா வித்தியாலயம், சாஹிரா முஸ்லிம் கல்லூரி, மகாபோதி கல்லூரி, மிகிந்தலை மகா வித்தியாலயமம் மற்றும் தந்திரிமலை விமலதோன ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.

பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடவுள்ள படையினருக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே குறித்த பாடசாலைகள் எதிர்வரும் 4 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக வடமேல் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத் தவிர, அநுராதபுரம் மகளிர் கல்லூரி, விவேகானந்தா மகா வித்தியாலயம், கம்மளக்குளம் கல்லூரி, குருந்தன்குளம் மகா வித்தியாலயம், மிகிந்தலை முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளதாகவும் வடமேல் மாகாண கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்