வரி அதிகரிப்பால் தேசிய தங்காபரணத்துறைக்கு பாதிப்பு

தங்கத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பினால் தேசிய தங்காபரணத் துறைக்கு பாதிப்பு

by Staff Writer 24-06-2018 | 12:57 PM
Colombo (News 1st) தங்கத்திற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் தேசிய தங்காபரணத் துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அமுல்படுத்தப்பட்டுள்ள இறக்குமதி வரியை குறைக்குமாறு ஜனாதிபதியூடாக கோரிக்கை விடுக்கவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேஷல ஜயரத்ன கூறியுள்ளார். இறக்குமதி வரி அதிகரித்துள்ளதால் தங்கம் சார் உற்பத்திகளின் ஏற்றுமதிகளும் குறைவடைந்துள்ளதாக பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இறக்குமதி வரி அதிகரித்துள்ளதால் சட்டவிரோதமாக நாட்டிற்கு தங்கத்தைக் கொண்டுவரும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக பேஷல ஜயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.