பூநொச்சிகுளத்தில் குடியேற்றம்:மக்கள் குற்றச்சாட்டு

மன்னார் - பூநொச்சி குளம் நிரப்பப்பட்டு குடியேற்றம் இடம்பெறுவதாக மக்கள் குற்றச்சாட்டு

by Staff Writer 23-06-2018 | 8:08 PM
Colombo (News 1st)  மன்னார் - பூநொச்சி பகுதியில் விவசாயத்திற்கு நீர் பெறப்படும் குளம் மணலிட்டு நிரப்பப்பட்டு குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூநொச்சி கிராமத்தில் 80 விவசாயக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. பூநொச்சி குளத்தின் ஊடாக சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. 15 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட பூநொச்சி குளத்தில் மணல் நிரப்பி குடியிருப்புகளை அமைக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்தனர். பூநொச்சி குளத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் குடும்பம் ஒன்று வசித்து வருவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் முசலி பிரதேச செயலகத்தினை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஒரு குடும்பம் மாத்திரமே நீண்ட காலமாக குறித்த பகுதியில் வசித்து வருவதாகவும் வேறு எவரும் இடத்தைக் கைப்பற்றவில்லை எனவும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.