சிறுத்தையை கொன்றவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்துக்கொன்றவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

by Bella Dalima 22-06-2018 | 6:37 PM
Colombo (News 1st)  கிளிநொச்சி - அம்பாள்குளம் கிராமத்தில் சிறுத்தை ஒன்றை அடித்துக்கொன்றவர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எம்.ஜீ.சீ.சூரியபண்டார தெரிவித்தார். சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வௌியாகியுள்ள காணொளிகள், நிழற்படங்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு சந்தேகநபர்களை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டதாக அவர் கூறினார். சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திற்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாள்குளம் கிராமத்திற்குள் நேற்று (21) அதிகாலை நுழைந்த சிறுத்தை தாக்கியதில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சிறுத்தை மடக்கி பிடிக்கப்பட்டதுடன், கிராம மக்களால் அது அடித்துக் கொல்லப்பட்டது.