தமிழ்படம் 2.0 தலைப்பில் மாற்றம்

'தமிழ்படம் 2.0' தலைப்பில் மாற்றம்

by Chandrasekaram Chandravadani 21-06-2018 | 5:41 PM
சிவா நடிப்பில் தயாரிக்கப்பட்ட 'தமிழ்ப்படம் 2.0' படத்தின் தலைப்பு 'தமிழ்படம் 2' என மாற்றப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஸீரோவிற்கு மதிப்பில்லை என்பதால் தலைப்பிலிருந்து ஸீரோவை மட்டும் நீக்குகிறோம். எனவே, படத்தின் தலைப்பு இனிமேல் 'தமிழ்ப்படம் 2' என்றே அழைக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்துவரும் நிலையில் படம் எதிர்வரும் ஆகஸ்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.