சந்திமாலுக்கு போட்டித்தடை: ICC-இல் மேன்முறையீடு

சந்திமாலுக்கு விதிக்கப்பட்ட போட்டித்தடைக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையில் மேன்முறையீடு

by Bella Dalima 21-06-2018 | 8:33 PM
Colombo (News 1st) இலங்கை டெஸ்ட் அணித்தலைவரான டினேஷ் சந்திமாலுக்கு விதிக்கப்பட்ட போட்டித்தடைக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் மேன்முறையீடு செய்துள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணித்தலைவர் டினேஷ் சந்திமால் பந்தின் தன்மையை மாற்றியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை குற்றஞ்சாட்டியது. சந்திமால் ஏதோவொரு இனிப்புப் பண்டத்தை பயன்படுத்தி பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்ததாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர் அந்தக் குற்றத்துக்காக சந்திமாலுக்கு தண்டனை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்தது. அதனைத் தொடர்ந்தே டினேஷ் சந்திமால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பாக மேன்முறையீடு செய்துள்ளார். எவ்வாறாயினும், மேன்முறையீட்டை பரிசீலிப்பதற்காக முழுமையான விசாரணை நடத்துவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தனது ட்விட்டர் கணக்கில் அறிவித்துள்ளது.