சர்வாதிகாரி உருவாக இடமளிக்கப் போவதில்லை: ஜனாதிபதி

கொடுங்கோல் ஆட்சியாளரோ சர்வாதிகாரியோ உருவாக இடமளிக்கப் போவதில்லை: ஜனாதிபதி

by Bella Dalima 21-06-2018 | 8:57 PM
Colombo (News 1st) கொடுங்கோல் ஆட்சியாளரோ, சர்வாதிகாரியோ அல்லது இராணுவ ஆட்சியாளரோ நாட்டில் உருவாகுவதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மகா சங்கத்தினர் இந்நாட்டிற்கு சர்வாதிகாரி ஒருவர் தேவை என போதிப்பார்களானால், அது தவறான விடயம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, சர்வாதிகாரத்தின் போக்கை கடந்த காலத்தில் இந்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துகொண்டார்கள் எனவும் தெரிவித்தார். கடந்த கால ஆட்சி சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாகக் கூறியே 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாட்டில் உள்ள புத்திஜீவிகள், ஜனநாயகத்தை மதிப்போரின் உதவியுடன், சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்காதிருக்கப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தின் நிக்கவெரட்டிய - கொடவெஹெர கிராமத்தில் உதாகம்மான திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி இக்கருத்துக்களைக் கூறினார்.