SAITM: சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

SAITM தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

by Bella Dalima 20-06-2018 | 9:56 PM
Colombo (News 1st) சைட்டம் (SAITM) நிறுவனத்தை இரத்து செய்து அதன் மாணவர்களை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழத்தில் இணைத்துக்கொள்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. SAITM பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பீடத்தில் 2009 ஆம் ஆண்டு 9 ஆம் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து 2017 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 17 ஆம் திகதி வரை அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாத்திரமே இந்த சட்டமூலம் உரித்தாகும் என கலாசார மற்றும் உயர்கல்வி அமைச்சர் விஜதாச ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு முடிவடைந்ததும், சைட்டம் பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பீடத்தினால் எவருக்கும் பட்டம் வழங்க முடியாது. அதுவே இந்த சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த மருத்துவப்பீடம் இரத்து செய்யப்படும்.
என அமைச்சர் விஜதாச ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார். சைட்டம் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குமாறு வலியுறுத்தி பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் மருத்துவப்பீட மாணவர்களின் செயற்பாட்டுக்குழு அமைதியான முறையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.