ரஷ்ய காதலிகளை நான் இலஞ்சமாகப் பெறவில்லை – பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

ரஷ்ய காதலிகளை நான் இலஞ்சமாகப் பெறவில்லை – பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

ரஷ்ய காதலிகளை நான் இலஞ்சமாகப் பெறவில்லை – பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

20 Jun, 2018 | 4:03 pm

Colombo (News 1st)  பாராளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் நேற்றைய தினம் (19) பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது, சிலர் தமது வாகன சாரதிகள் ஊடாக ரஷ்யக் காதலிகளை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இலஞ்சம் பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தாம் அவர்களைப் போன்று ரஷ்யக் காதலிகளையோ வேறு எதனையுமோ இலஞ்சமாகப் பெறவில்லை என தெரிவித்தார்.

இது தொடர்பில் சத்தியக்கடதாசியை தாம் சமர்ப்பித்ததைப் போன்று, எதிர்க்கட்சியினரையும் சமர்ப்பிக்குமாறு ரஞ்சன் ராமநாயக்க சவால் விடுத்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுனாமி மூலம் கிடைக்கப்பெற்ற 82 மில்லியன் நிதியை தனது தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றவில்லை எனவும் சீன திட்டங்கள் மூலம் பணம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் நிரூபிப்பார் என தாம் நம்புவதாகவும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்மைப் போல் சத்தியக்கடதாசியை சமர்ப்பிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்