யாழ்ப்பாணப் பெண் கொட்டாஞ்சேனையில் சடலமாக மீட்பு: விசாரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணப் பெண் கொட்டாஞ்சேனையில் சடலமாக மீட்பு: விசாரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணப் பெண் கொட்டாஞ்சேனையில் சடலமாக மீட்பு: விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

20 Jun, 2018 | 7:52 pm

Colombo (News 1st)  கொட்டாஞ்சேனை – புது செட்டித்தெருவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு புது செட்டித்தெருவில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று (19) இரவு பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – ஊரெழு பகுதியைச் சேர்ந்த குணரட்னம் விஜிதா என்ற 35 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்