புத்தகமாகும் நடிகை பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாறு

புத்தகமாகும் நடிகை பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாறு

புத்தகமாகும் நடிகை பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாறு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

20 Jun, 2018 | 5:58 pm

பொலிவுட், ஹொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமாக வௌியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தனது 17ஆவது வயதில் மிஸ் இந்தியா பட்டத்தைப் பெற்ற பிரியங்கா, அதே ஆண்டில் உலக அழகி பட்டத்தையும் வென்றார். அதனையடுத்து, இந்தி சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

ஹொலிவுட்டில் ‘குவாண்டிகா’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமான பிரியங்கா, சிறந்த கதாபாத்திரத்திற்கான விருதை இரண்டு முறைகள் பெற்றுள்ளார்.

நடிகை, தயாரிப்பாளர், சமூக சேவகி, யுனிசெப்பின் நல்லெண்ணத் தூதர் போன்ற பன்முகங்கள் கொண்ட பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்படவுள்ளது.

‘Unfinished’ என்ற இந்தப் புத்தகத்தில் பிரியங்காவின் வாழ்க்கை குறித்த கட்டுரைகள், கதைகள் மற்றும் அவர் குறித்த கருத்துகள் போன்றன இடம்பெறவுள்ளன.

இந்தப் புத்தகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்