தெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டவர்கள் இருவர் பலி

தெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டவர்கள் இருவர் பலி

தெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டவர்கள் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2018 | 9:20 am

Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ – ஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வௌிநாட்டவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியொன்றின் மீது வேன் மோதி இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் 34 வயதுடைய பெண்ணொருவரும் 4 வயதுடைய சிறுமியொருவருமே உயிரிழந்துள்ளனர்.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் எல்பிட்டிய மற்றும் களுத்துறை நாகொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்