தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பிற்போடப்படாது – பரீட்சைகள் திணைக்களம்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பிற்போடப்படாது – பரீட்சைகள் திணைக்களம்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பிற்போடப்படாது – பரீட்சைகள் திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2018 | 9:49 am

Colombo (News 1st) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி  நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரப்பப்பட்ட வதந்திகள் பொய்யானவை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்தார்.

பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பிலான கோரிக்கை எந்தத் தரப்பினரிடமிருந்தும் விடுக்கப்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித சுட்டிக்காட்டினார்.

இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் 3,25,000 சிறுவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்