கிளிநொச்சியில் நவீன ஸ்கேனர் மூலம் விடுதலைப் புலிகளின் புதையல் தேடிய ஒருவர் கைது

கிளிநொச்சியில் நவீன ஸ்கேனர் மூலம் விடுதலைப் புலிகளின் புதையல் தேடிய ஒருவர் கைது

கிளிநொச்சியில் நவீன ஸ்கேனர் மூலம் விடுதலைப் புலிகளின் புதையல் தேடிய ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2018 | 10:41 am

Colombo (News 1st) கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நவீன ஸ்கேனர் மூலம் விடுதலைப் புலிகளின் புதையலைத் தேடியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இருவர், நவீன ஸ்கேனர் மூலம் தேடுதல் மேற்கொள்வது தொடர்பில் தகவலறிந்த விசேட அதிரடிப் படையினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது, தேடுதலில் ஈடுபட்ட ஒருவர் தப்பியோடியுள்ள நிலையில், மற்றையவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, தேடுதலுக்குப் பயன்படுத்திய 58 இலட்சம் பெறுமதியான ஸ்கேனரும் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபரும் ஸ்கேனரும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி பூநகரியின் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட கொள்கலன் தொடர்பில் பொலிஸாரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்