தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

by Staff Writer 19-06-2018 | 9:33 AM
Colombo (News 1st) தபால் ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டு ள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிடின் சேவையிலிருந்து விலகியதாகக் கருதப்படும் என தபால்மா அதிபர் ரோகன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார். தபால்மா அதிபரை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டு ள்ளது. இன்றைய தினம், அனைத்து தபால் நிலையங்களையும் திறந்து ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்துவதும் அவர்களுக்கான பாதிகாப்பை வழங்குவதும் திணைக்கள அதிகாரியின் பொறுப்பு என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, தேவை ஏற்படும் பட்சத்தில் பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸாரின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார். தபால் நிலையங்களின் தபாலதிபர்கள், பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் நிபந்தனைகள் மற்றும் விதிகளுக்குட்பட்டு பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தபால்மா அதிபரின் தீர்மானத்தையும் மீறி பணிப்பகிஷ்கரிப் பில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பிலான திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று 9 ஆவது நாளாக தொடர்கின்றது. இந்த விடயம் தொடர்பில் தபால்மா அதிபர் ரோகண அபேரத்னவிடம் நியூஸ் ஃபெஸ்ட் வினவிய போது, நேற்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலில் எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை என அவர் தெரிவித்தார்.