சிரிய தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம்

சிரிய தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் - ஈராக் குற்றச்சாட்டு

by Staff Writer 19-06-2018 | 10:09 AM
சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என ஈராக் குற்றஞ்சாட்டி யுள்ளது. சிரியாவின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அரச ஆதரவுப் படை வீரர்கள் 22 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சிரியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சிரிய - ஈராக்கிய எல்லையினருகே நேற்று முன்தினம் இரவு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், சிரிய நாட்டினர் அல்லாத சிரிய அரசின் ஆதரவு பெற்ற வெளிநாட்டு படை வீரர்கள் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் தெரிவித்தி ருந்தார். சிரிய - ஈராக்கிய எல்லை அருகேயுள்ள அல்-ஹரி எனும் இடத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாகவும் அமெரிக்கக் கூட்டுப்படைகள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் சிரிய ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதில், ஈராக்கிய இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளதாக சிரிய போர் கண்காணிப்பகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு அமெரிக்காவின் கூட்டுப்படைகளே காரணம் என ஈராக் குற்றஞ்சாட்டியுள்ளது. சிரியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சிறிய மாகாணமான டேய்ர் எஸ்ஸோர் பகுதி ஐ.எஸ். பயங்கர வாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், இங்கு அமெரிக்கக் கூட்டுப்படைகளும் சிரியாவுக்கு ஆதரவாக மோதலில் ஈடுபடும் ரஷ்ய படைகளும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து தனித் தனியே போரிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.