ரஜினியுடனான நட்பு மாறாது - கமல்

ரஜினியுடனான நட்பு மாறாது - கமல்

by Bella Dalima 18-06-2018 | 5:39 PM
எதிர்காலத்தில் ரஜினிக்கும் கமலுக்கும் இடையிலான நட்பு மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என கமலிடம் கேட்டதற்கு 'அவருடனான நட்பு எப்போதும் மாறாது. அவரது கொள்கைகள் மாறும்போது நானும் மாறுவேன்' என்று கூறினார். சினிமாவில் ரஜினியும் கமலும் பிரபலமான நட்சத்திரங்கள். இருவரும் ஒரே நேரத்தில் அரசியலுக்கு வந்தவர்கள். தற்போது இருவருக்கிடையேயும் நேரடிப் போட்டி நிலவி வருகின்றது. திரைத்துறையில் நண்பர்களாக இருந்த எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் அரசியலில் எதிரிகளாக மாறியது போல எதிர்காலத்தில் ரஜினியும் கமலும் மாற வாய்ப்பு இருக்கிறதா என கமலிடம் கேட்டதற்கு,
அவருடனான நட்பு எப்போதும் மாறாது. அதே நேரம், அவரது கொள்கைகள் மாறும்போது நானும் மாறுவேன். கொள்கை வி‌டயத்தில் என் அண்ணனை கூட நான் விட்டு வைக்க மாட்டேன். அப்படிப்பட்ட சூழ்நிலை அமைந்தால் களத்தில் சந்திக்க தயார்
என பதிலளித்தார். கமலின் அண்ணன் சாருஹாசன், கமலால் முதல்வர் ஆக முடியாது என விமர்சிப்பதை பற்றி கேட்டதற்கு,
நான் சினிமாவுக்கு செல்கிறேன் என்றபோது, நீ சாப்பாட்டுக்கு என்ன செய்வாய் என கேட்டார். இப்போது நன்றாக சாப்பிடும் வசதியை ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள். தேர்தலில், அரசியல் செயற்பாடுகளில் மக்கள் நீதி மய்யம் பெறும் வெற்றி தான் அவருக்கு பதிலாக அமையும்
என கூறினார்.