கிழக்கில் வீசிய பலத்த காற்றினால் 136 வீடுகள் சேதம்

கிழக்கு மாகாணத்தில் வீசிய பலத்த காற்றினால் 136 வீடுகள் சேதம்

by Staff Writer 18-06-2018 | 6:43 PM
Colombo (News 1st)  கிழக்கு மாகாணத்தில் வீசிய பலத்த காற்றினால் 136 வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் நிவாரணங்களை வழங்குவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கடும் காற்று வீசியதாக அவர் குறிப்பிட்டார். மூன்று மாவட்டங்களிலும் 136 வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. அம்பாறை மாவட்டத்தில் நேற்றிரவு பலத்த காற்று வீசியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். கல்முனை, பாண்டிருப்பு மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர் கூறினார். திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த காற்று வீசியுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய கடும் காற்றினால் மரங்கள் சில முறிந்து வீழ்ந்துள்ளன.  

ஏனைய செய்திகள்