உலகின் மிக உயரமான குப்பை மேடு - எவரெஸ்ட்!

உலகின் மிக உயரமான குப்பை மேடு - எவரெஸ்ட்

by Staff Writer 17-06-2018 | 6:26 PM
உலகின் மிக உயரமான குப்பை மேடாக எவரெஸ்ட் சிகரம் மாற்றமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியில் மலை ஏறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் அதிகரித்தமையினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மலை ஏறுவோர் கொண்டு செல்லும் பொருட்களை சிகரத்தில் விட்டு வருவதனாலேயே இத்தகைய அபாயநிலை உருவாகியுள்ளது. இவ்வருடத்தில் மாத்திரம் எவரெஸ்ட் சிகரம் ஏறுபவர்களின் எண்ணிக்கை 600 ஆல் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.