உமா ஓயாவுக்கு இன்னும் காலம் தேவை!

உமா ஓயாவுக்கு இன்னும் காலம் தேவை!

by Staff Writer 17-06-2018 | 9:46 PM
உமா ஒயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவடைய இன்னும் ஒரு வருடம் தேவைப்படுவதாக பொறியியலாளர்கள் கூறுகின்றனர். கரந்தகொல்ல சுரங்கப் பாதையில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவே இதற்கு காரணமாகும். மக்களின் எதிர்ப்புக்களுக்கு சற்றும் பஞ்சமில்லாமல் ஆரம்பமான உமா ஒயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ஈரான் ஏற்றுமதி அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின்கீழ் 2008 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பமாயின. நிர்மாணப் பணிகள் தொடர்ந்தபோது, திட்டத்தினால் மலையக நீரேந்துப் பகுதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை தடுக்க செயற்றிட்டப் பொறியியலாளர்கள் தவறியுள்ளதாக சூழலியலாளர்கள் குரல் எழுப்பினர்.