37 கார்களை அடித்து நொறுக்கிய பிரபாஸ்

37 கார்களை அடித்து நொறுக்கிய பிரபாஸ்

37 கார்களை அடித்து நொறுக்கிய பிரபாஸ்

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2018 | 5:57 pm

பாகுபலி படம் மூலம் புகழ்பெற்ற பிரபாஸ், தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் 37 கார்களை அடித்து நொறுக்கியிருக்கிறார்.

பாகுபலி படம் மூலம் தென் இந்தியாவின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ்.

அவர் அடுத்து நடிக்கும் படம் சாஹோ. பாகுபலிக்கு நிகரான செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இதில் பிரபாசுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.

அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார்.

இந்த படத்திற்காக 37 கார்களையும் 5 டிரக்குகளையும் பிரபாஸ் அடித்து நொறுக்கும் பெரிய சண்டைக்காட்சி அபுதாபியில் படமாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 20 நாட்கள் எடுக்கப்பட்ட இந்த சண்டைக் காட்சிக்காக 100 நாட்கள், முன் தயாரிப்பு பணிக்காக மட்டும் எடுத்துக் கொண்டுள்ளார் படத்தின் சண்டைப் பயிற்சியாளர் கென்னி பேட்.

​ஹொலிவுட்டை சேர்ந்த இவரும் ஒளிப்பதிவாளர் மதியும் திட்டமிட்டு இந்த சண்டைக் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது சாஹோ திரைப்படம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்