by Bella Dalima 16-06-2018 | 5:07 PM
Colombo (News1 st) சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 6 ஆகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.
மாணவர்களின் நலன் கருதி, மாணவர்களுக்கு தேவையான பாடநெறிகளை உள்ளடக்கி புதிய திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
எதிர்வரும் நாட்களில் 26 தொழிற்சார் பாடங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சாதாரண தரப் பரீட்சைகளில் சித்தியடையாவிட்டாலும், குறித்த தொழிற்சார் கல்வி பாடங்கள் மூலம் மாணவர்கள் உயர் தரத்திற்கு செல்ல முடியும் எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டினார்.