மன்னாரிலிருந்து கொழும்பிற்கு கேரளக்கஞ்சா கடத்தல்

மன்னாரிலிருந்து கொழும்பிற்கு கேரளக்கஞ்சா கடத்தல்

by Staff Writer 16-06-2018 | 4:57 PM
Colombo (News 1st)  மன்னாரிலிருந்து கொழும்பிற்கு கேரளக்கஞ்சா கடத்தப்படுகின்றமை தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன. இரண்டு கோடியே 40 இலட்சம் ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் மூன்று பேர் நேற்று (15) கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் இந்தியப் பிரஜை என்பதுடன், ஏனைய இருவரும் மன்னார் - பேசாலையை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சிறிய ரக லொறிகளில் மீன் வியாபாரம் செய்யும் போர்வையில் இந்த கடத்தல் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். சந்தேகநபர்கள் மூவரையும் இன்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.