கதிர்காமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கதிர்காமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கதிர்காமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2018 | 4:18 pm

Colombo (News 1st) கதிர்காமம் பொலிஸ் நிலையத்திற்கு மேலதிகமாக உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

கதிர்காமம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

கதிர்காமம் கிரிவெஹர ரஜ மகா விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட தேரர்கள் இருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குற்றச் செயல்களைப் புரிந்துவிட்டு நாட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்