எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்பட முஸ்லிம்கள் இந்நாளில் உறுதிபூண வேண்டும்: அசாத் சாலி

எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்பட முஸ்லிம்கள் இந்நாளில் உறுதிபூண வேண்டும்: அசாத் சாலி

எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்பட முஸ்லிம்கள் இந்நாளில் உறுதிபூண வேண்டும்: அசாத் சாலி

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2018 | 7:30 pm

Colombo (News 1st) நாட்டின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்பட முஸ்லிம்கள் இந்நாளில் உறுதிபூண வேண்டும் என தேசிய ஐக்கிய முன்ணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்தகால ஆட்சியாளர்கள் ரமழான் காலத்தில் முஸ்லிம்களின் மனதை திசை திருப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும், அந்த செயற்பாடுகளில் முஸ்லிம் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது எனவும் அசாத் சாலி வலியுறுத்தியுள்ளார்.

அமைதியான முறையில் நோன்பை நோற்ற போதும் அரசியல் ரீதியில் முஸ்லிம் மக்கள் சங்கடங்களை எதிர்நோக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் முஸலிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் தற்போது அவற்றை அரசாங்கத்தின் மீது சுமத்தி மக்களை திசை திருப்ப முயற்சிப்பதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்