பாகிஸ்தானின் தலிபான் தலைவர் முல்லா பஸ்லுல்லா கொலை

பாகிஸ்தானின் தலிபான் தலைவர் முல்லா பஸ்லுல்லா கொலை

by Bella Dalima 15-06-2018 | 5:06 PM
பாகிஸ்தானின் முக்கிய தலிபான் தலைவரான முல்லா பஸ்லுல்லா ஆப்கானிஸ்தானில் நடந்த அமெரிக்க விமானப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். பாகிஸ்தானிலிருந்து செயற்படும் ''தெஹ்ரீக் இ தலிபான்'' அமைப்பின் தலைவராக 2013 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வந்தவர் முல்லா பஸ்லுல்லா. அதற்கு முன்னதாக பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில், அந்த அமைப்பின் தாக்குதல்களை முன்னின்று நடத்தியவர். பாகிஸ்தானின் பெண்ணுரிமை செயற்பாட்டாளரான மலாலா யூஷப் சாயி கடந்த 2012-ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுடப்பட்ட பொழுது, குறித்த பகுதியில் பொறுப்பாளராக இவர் செயற்பட்டதாக ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் முகம்மத் ரத்மனிஷ் கூறியுள்ளார். முல்லா பஸ்லுல்லா ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் அமெரிக்க இராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.