சீன இறக்குமதிப்பொருட்களுக்கு வரி: ட்ரம்ப் ஒப்புதல்

சீன இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிக்கும் திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதல்

by Bella Dalima 15-06-2018 | 4:24 PM
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கும் திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதலளித்துள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 25% வீத வரி விதிக்கப்படும் அதேவேளை, சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் 2.5% வரி விதிக்கப்படுகிறது. இந்த நியாயமற்ற வர்த்தகத்தை நிறுத்தவே வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரி அதிகரிப்பு தொடர்பில் ஆலோசனை நடத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வர்த்தகம் தொடர்பான ஆலோசனைக்குழுவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.