மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் ஆய்வு

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் ஆய்வு

by Bella Dalima 14-06-2018 | 8:16 PM
Colombo (News 1st)  மன்னார் சதொச கட்டட வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் உள்ளிட்ட எச்சங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. மன்னார் பொது வைத்தியசாலையில், மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி பணிமனையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளும் கலந்துகொண்டிருந்தனர். 28 ஆம் திகதி உரிய முறையில் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகளை அடுத்து சில எலும்புகளைத் தாம் கண்டுபிடித்ததாகவும் அவை தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் W.R.A.S. ராஜபக்ஸ தெரிவித்தார். பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி அகழ்வுப் பணிகள் முன்னெடுத்தமையால், குறித்த பகுதி 75 வீதம் பாதிப்படைந்துள்ளதாக களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார். கடல் மட்டத்திலிருந்து 1.17 மீட்டர் வரை தோண்டும் பணிகள் நிறைவுற்றுள்ளதாகவும் இதன்போது ஆபரணத் துண்டுகள் இரண்டையும் சில நீல நிற பீங்கான் துண்டுகளையும் மீட்டதாக அவர் கூறினார். மீட்கப்பட்ட பொருட்களுக்கும் எலும்புப் பாகங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆராய்வதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டார்.