by Bella Dalima 14-06-2018 | 5:51 PM
ஜோர்ஜிய பிரதமர் விரிகஷ்விலி (Kvirikashvili) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஜோர்ஜிய மக்களால் தமக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தே தாம் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
50 வயதான விரிகஷ்விலி கடந்த 2015 ஆம் ஆண்டு, ஜோர்ஜியாவின் பிரதமராக பதவியேற்றார்.
பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அண்மைக்காலமாக வலியுறுத்தப்பட்டு பொதுமக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் ஜோர்ஜியாவில் புதிய பிரதமர் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.