16 சீனப் பிரஜைகளை நாடு கடத்த நடவடிக்கை

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 16 சீனப் பிரஜைகளை நாடு கடத்த நடவடிக்கை

by Bella Dalima 14-06-2018 | 4:25 PM
Colombo (News 1st)  சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த சீனப் பிரஜைகள் 16 பேரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சீனப் பிரஜைகள் 26 பேர் நேற்று முன்தினம் (12) இரவு கைது செய்யப்பட்டனர். அவர்களில் 10 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இதேவேளை, செல்லுபடியாகும் விசா இன்றி எவரேனும் நாட்டில் தங்கிருப்பது குறித்து தகவல் கிடைக்கும் பட்சத்தில் அது தொடர்பில் அறிவிக்குமாறும் அவர் கோரினார். அதற்கமைய, 1962 என்ற எண்ணுக்கு அறிவிக்க முடியும் எனவும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த ஹெட்டியாராச்சி கூறினார்.