மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: அஞ்சலோ மெத்தியூஸ், லஹிரு கமகே விலகல்

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: அஞ்சலோ மெத்தியூஸ், லஹிரு கமகே விலகல்

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: அஞ்சலோ மெத்தியூஸ், லஹிரு கமகே விலகல்

எழுத்தாளர் Bella Dalima

13 Jun, 2018 | 3:41 pm

Colombo (News 1st)  இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரான அஞ்சலோ மெத்தியூஸூம், வேகப்பந்து வீச்சாளரான லஹிரு கமகேயும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளரான லஹிரு கமகே உபாதைக்குள்ளான நிலையில், தொடரிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பதிலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஸ்க குணதிலக்கவும் தசுன் சானக்கவும் தொடரில் பங்கேற்க இன்று இரவு மேற்கிந்தியத்தீவுகளுக்கு செல்லவுள்ளனர்.

இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 1-0 என்ற கணக்கில் மேற்கிந்தியத்தீவுகள் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை (14) ஆரம்பமாகவுள்ளது.

இந்தப்போட்டி Gros Islet மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்