மன்னாரில் காணாமற்போன 2 மீனவர்களின் சடலங்கள் புங்குடுதீவில் கரையொதுங்கின

மன்னாரில் காணாமற்போன 2 மீனவர்களின் சடலங்கள் புங்குடுதீவில் கரையொதுங்கின

மன்னாரில் காணாமற்போன 2 மீனவர்களின் சடலங்கள் புங்குடுதீவில் கரையொதுங்கின

எழுத்தாளர் Bella Dalima

13 Jun, 2018 | 4:52 pm

Colombo (News 1st)  மன்னாரில் காணாமற்போன இரண்டு மீனவர்களின் சடலங்கள் யாழ். புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளன.

இன்று முற்பகல் 10 மணியளவில் சடலங்கள் கரையொதுங்கியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

மன்னார் – ஊருமலை பகுதியில் கடந்த 6 நாட்களுக்கு முன்னர் கடற்றொழிலுக்கு சென்றிருந்த இரண்டு மீனவர்கள் காணாமற்போயிருந்தனர்.

அவர்களின் படகு நேற்று (12) கரையொதுங்கியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்ரின் கூஞ்ஞ, எமல்ரன் கூஞ்ஞ ஆகிய இரண்டு சகோதரர்களே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்