பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதுஷ்கவின் உதவியாளர்கள் மூவர் கைது

பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதுஷ்கவின் உதவியாளர்கள் மூவர் கைது

பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதுஷ்கவின் உதவியாளர்கள் மூவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

13 Jun, 2018 | 4:38 pm

Colombo (News 1st)  திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவரான மாகந்துரே மதுஷ்கவின் உதவியாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடுகன்னாவ பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்