தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை மறுதினம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை மறுதினம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை மறுதினம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

13 Jun, 2018 | 7:26 pm

Colombo (News 1st)  ஷவ்வால் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை மறுதினம் (15) நடைபெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிறைக்குழு அதிகாரிகள் மற்றும் இஸ்லாம் மத பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

அதன்படி, ஷவ்வால் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் வௌ்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் தலை பிறை பற்றி எடுக்கப்படும் ஏகமனதான தீர்மானம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்