புதிய டெஸ்ட்  நிரல்படுத்தல்: குசல் மென்டிஸ் 16 ஆம் இடத்திற்கு முன்னேற்றம்

புதிய டெஸ்ட் நிரல்படுத்தல்: குசல் மென்டிஸ் 16 ஆம் இடத்திற்கு முன்னேற்றம்

புதிய டெஸ்ட் நிரல்படுத்தல்: குசல் மென்டிஸ் 16 ஆம் இடத்திற்கு முன்னேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

13 Jun, 2018 | 4:06 pm

Colombo (News 1st)  டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் புதிய நிரல்படுத்தலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

புதிய தரவரிசையின் படி இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் 667 புள்ளிகளுடன் 16 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் வௌிப்படுத்திய ஆற்றல்களுக்கு அமைவாக இந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளார்.

இலங்கை அணியின் தலைவரான டினேஷ் சந்திமால் 716 புள்ளிகளுடன் 10 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் துடுப்பாட்ட வீரர்களுக்கான நிரல்படுத்தலில் மொத்தமாக 992 புள்ளிகளை ஈட்டியுள்ள அவுஸ்திரேலியாவின் ஸ்டிவன் ஸ்மித் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.

இந்திய அணித்தலைவரான விராட் கோஹ்லி இரண்டாமிடத்திலும் இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்றாமிடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்