காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை மாற்றுமாறு கோரிக்கை

காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை மாற்றுமாறு கோரிக்கை

காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை மாற்றுமாறு கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

13 Jun, 2018 | 3:53 pm

Colombo (News 1st)  பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள சில பொறுப்புகளில் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு , வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நேற்று (12) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

எவ்வாறாயினும், இந்து மத அலுவல்கள் பிரதியமைச்சராக அவர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்ச்சனங்களை முன்வைத்திருந்தனர்.

இந்து மத அலுவல்கள் பிரதி அமைச்சர் பதவியிருந்து அவரை நீக்குவதற்கான எவ்வித அதிகாரமும் தமக்கு இல்லை என இந்து மத அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், அவருக்கு சில பொறுப்புகளை வழங்காதிருப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுரேஸ் பொன்னையா நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்