2 இராஜாங்க அமைச்சர்கள், 5 பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

2 இராஜாங்க அமைச்சர்கள், 5 பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

2 இராஜாங்க அமைச்சர்கள், 5 பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Bella Dalima

12 Jun, 2018 | 3:19 pm

Colombo (News 1st) 

இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் 5 பிரதியமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ரஞ்சித் அலுவிஹாரே சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

லக்கி ஜயவர்தன மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

அஜித் மானப்பெரும சுற்றாடல் பிரதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அங்கஜன் இராமநாதன் விவசாய பிரதியமைச்சராகவும் காதர் மஸ்தான் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் பிரதியமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.

எட்வர்ட் குணசேகர உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி பிரதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

நலின் பண்டார ஜெயமஹா ​பொது நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சராக ஜனாபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்