முன்னாள் கடற்றொழில் அமைச்சர் சரத்குமார குணரத்ன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் சரத்குமார குணரத்ன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் சரத்குமார குணரத்ன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

12 Jun, 2018 | 3:54 pm

Colombo (News 1st) முன்னாள் கடற்றொழில் அமைச்சர் சரத்குமார குணரத்ன உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இரண்டு இலட்சத்து 90 ஆயிரம் நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேசிங்க முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

25 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் சந்தேகநபர்கள் செல்வதற்கு நீதிபதி அனுமதியளித்தார்.

இந்த வழக்கு அடுத்த மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்