கரைச்சி பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை

கரைச்சி பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை

கரைச்சி பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை

எழுத்தாளர் Bella Dalima

12 Jun, 2018 | 9:00 pm

Colombo (News 1st)  கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போது, தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.

கரைச்சி பிரதேச சபையின் நான்காவது அமர்வு, சபைத் தலைவர் வேழமாலிகிதன் தலைமையில் காலை 9 மணியளவில் ஆரம்பமானது.

இதன்போது, சுயேச்சைக்குழு உறுப்பினர் ரஜினிகாந்த், தவிசாளரை நோக்கி கேள்வியெழுப்பியதையடுத்து அமைதியின்மை ஏற்பட்டது.

கட்சி சார்ந்து செயற்படுகின்றீர்களா அல்லது ஒரு சில உறுப்பினர்களின் நலன் சார்ந்து செயற்படுகின்றீர்களா என தவிசாளரை நோக்கி கேள்வியெழுப்பினார்.

இதனையடுத்து, பிரதேச சபையின் தலைவரால் குறித்த உறுப்பினர் சபையிலிருந்து வௌியேற்றப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அவருடன், இணைந்து எதிரணியிலிருந்த மேலும் 11 பேர் வௌியேறிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், பட்டியல் முறையில் தெரிவாகிய உறுப்பினர்களை வௌியேறுமாறு தமழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரொருவர் தெரிவித்ததாகவும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்