யாழில் கண்டனப் பேரணி!

யாழில்,மீனவர்கள் அட்டை தொழிலில் ஈடுபடுவதை கண்டித்து கண்டன பேரணி

by Staff Writer 11-06-2018 | 3:48 PM

வௌிமாவட்ட மீனவர்கள் அட்டை தொழிலில் ஈடுபடுவதை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று கண்டன பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், வடமாகாணத்தை சேர்ந்த 118 கடற்றொழிலாளர் சங்கங்கள் இதில் பங்கேற்றுள்ளன. யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன முன்றலில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பேரணி, ஏ 9 வீதியூடாக யாழ் மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது. இதன்போது வௌிமாவட்ட மீனவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து, அரசாங்க அதிபர் நா.வேதநாயகத்திடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று மீனவர்கள் ,ஆளுநரின் இணைப்பாளரிடம் மகஜரொன்றை கையளித்துள்ளனர். வௌிமாவட்ட மீனவர்கள் அட்டை தொழிலில் ஈடுபடுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். யாழ் வடமராட்சி கிழக்கு பகுதி மீனவர்கள் கடந்த வாரம் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடிபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.