அதிக வட்டியுடனான கடன்  - இறுதியில் தற்கொலை!

அதிக வட்டியுடன் கடன் பெற்று , மன உளைச்சலால் இறுதியில் பதிவான மற்றும் தற்கொலை

by Staff Writer 11-06-2018 | 9:06 PM

மட்டக்களப்பு - மாவடிவேம்பு பகுதியில் அதிக வட்டியுடனான கடன் பெற்றுக் கொண்டமையினால் எழுந்த மன உளைச்சலால் ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

25 வயதான மோகராசா யோகராசா எனும் இளைஞர் நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார். நான்கு நிதி நிறுவனங்களிடம் பெற்றுக் கொண்ட அதிக வட்டியுடனான கடனை செலுத்த முடியாமையால் எழுந்த பிரச்சினையினால் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வட்டியுடனான கடன் தொல்லையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த மாதத்தில் மாத்திரம் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நுண் கடனாளிகளை கிராமிய கூட்டுறவு வங்கிகள் மற்றும் சேமிப்பு மற்றும் கடன் கூட்டுறவு சங்கங்களினூடாக பெற்றுக் கொள்ளும் கடன்களிலிருந்து மீட்பதற்கான குறைந்த வட்டியிலான கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தில் முதலில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவித்து இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் , 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது