வவுனியாவில் கேரள கஞ்சா !

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது...

by Staff Writer 11-06-2018 | 4:57 PM

வவுனியா புளியங்குளம் பகுதியில் சுமார் 9 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிற்கு பயணிக்கும் பஸ்ஸொன்றில் கேரளா கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த பஸ் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது 8 கிலோ 560 கிராம், கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கேரளா கஞ்சாவுடன், கதிர்காமத்தை ​சேர்ந்த 51 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.