லிந்துலை தலவாக்கலை நகரபிதாவின் விளக்கமறியல் நீடிப்பு

லிந்துலை தலவாக்கலை நகரபிதாவின் விளக்கமறியல் நீடிப்பு

லிந்துலை தலவாக்கலை நகரபிதாவின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2018 | 4:47 pm

லிந்துலை – தலவாக்கலை நகர சபையின் தலைவர் அசோக்க சேபால உள்ளிட்ட 8 சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இதன்போது கடத்தப்பட்ட பெண் குழந்தையை, குழந்தையின் தந்தையிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அக்கரபத்தனை போட்மோர் தோட்டத்தில் கடந்த வருடம், ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி, அந்தக் குழந்தையை விற்பனை செய்தமை தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்