தொடங்கொட – துடுகல பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையில் தீ – நிலைமை கட்டுப்பாட்டுக்குள்…

தொடங்கொட – துடுகல பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையில் தீ – நிலைமை கட்டுப்பாட்டுக்குள்…

தொடங்கொட – துடுகல பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையில் தீ – நிலைமை கட்டுப்பாட்டுக்குள்…

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2018 | 3:56 pm

தொடங்கொட – துடுகல பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீயினால் ஆடை தொழிற்சாலை முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

மதுகம களுத்துறை பிரதான வீதியின் தொடங்கொட பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

இன்று காலை 6 மணியளவில் தீ பரவியதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

தீயினால் அருகிலிருந்த சில வர்த்தக நிலையங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்