ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 18 ஆவது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப மாநாடு – கொழும்பில்

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2018 | 5:05 pm

18 ஆவது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பமாகியது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கொள்கை உருவாக்கம், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப துறையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக எதிர்நோக்க நேரிட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ட்டின் பெர்ணான்டோ, ஆசிய பசுபிக் தொலைத் தொடர்புகள் சங்கத்தின் 15 ஆவது தொலைத் தொடர்புகள் அபிவிருத்தி மாநாட்டின் தலைவர், ஆசிய பசுபிக் தொலைத் தொடர்புகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்