அமெரிக்க,வட கொரிய தலைவர்களின் சந்திப்புக்கு இன்னும் இருப்பது 24 மணி நேரத்திற்கும் குறைவான காலப்பகுதி – முழு உலகும் அவதானத்துடன்

அமெரிக்க,வட கொரிய தலைவர்களின் சந்திப்புக்கு இன்னும் இருப்பது 24 மணி நேரத்திற்கும் குறைவான காலப்பகுதி – முழு உலகும் அவதானத்துடன்

அமெரிக்க,வட கொரிய தலைவர்களின் சந்திப்புக்கு இன்னும் இருப்பது 24 மணி நேரத்திற்கும் குறைவான காலப்பகுதி – முழு உலகும் அவதானத்துடன்

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2018 | 9:57 pm

சிங்கப்பூரில் நாளை நடைபெறவுள்ள சந்திப்புக்கான, இருதரப்பு கலந்துரையாடல்கள் எதிர்பார்த்ததை விட துரிதகதியில் இடம்பெறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்கிடையிலான சந்திப்பு நாளை காலை சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், சந்திப்புக்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மொழிபெயர்ப்பாளர்கள் இருவர் சகிதம் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதன்பின்னர் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பவுள்ளனர்.

ஆட்சியில் உள்ள வடகொரிய ஜனாதிபதியொருவரை அமெரிக்க ஜனாதிபதியொருவர் சந்திக்கும் முதல்தடவை இதுவென்பதால் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக கருதப்படுகின்றது.

அமெரிக்காவுடன் நல்லுறவை பேண விரும்புவதாக வடகொரிய அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

அனைத்து அணுவாயுதங்களையும் வடகொரியா கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது.

எவ்வாறாயினும் வடகொரியா, தமது இருப்பை உறுதி செய்வதற்காக, பல தசாப்தங்களை அணுவாயுத கிடங்குக​ளை உருவாக்குவதற்காக செலவழித்தமை குறிப்பிடத்தக்கது,

இந்நிலையில, பேச்சுவார்த்தையில் இந்த விடயம் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்